
சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
செய்தி முன்னோட்டம்
சென்னை-தாம்பரத்தில் உள்ள கடப்பேரி பகுதியில் 18வீடுகள் கொண்ட ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவையான மின்சாரத்திற்காக மின்வாரியம் சார்பில் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து இன்று(மே.,1)காலை ஆயில் வெளியாகி, வெடித்து சிதறியுள்ளது.
அதன்பின்னர் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியத்துவங்கி, பைப்லைன்கள் மூலம் தீப்பரவி அடுக்குமாடி குடியிருப்பிலும் தீப்பற்றியது.
இதனால் அங்கிருந்த கார்-இருசக்கர வாகனங்களும்,ஏசி ஒன்றும் தீப்பற்றி எரிந்து சேதமாகின.
பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன்பேரில், அவர்கள் விரைந்துவந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தாம்பரம் காவல்துறையினரும் தகவலறிந்து அங்குவந்து விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள்.
குடியிருப்புக்குள்ளேயே டிரான்ஸ்பார்மர் வைத்தது மிகஆபத்தானது என்று அப்பகுதி மக்கள் கூறிவருவதோடு, அதனை அங்கிருந்து அகற்றவும் கோரியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தாம்பரம் அபார்ட்மென்ட்டில் பயங்கரம்.. காலையிலே அலறிய 18 குடும்பங்கள்.. காவு வாங்கப்பட்ட ஏசி, பைக், கார்கள்#tambaram #apartment #bikecarshttps://t.co/a5bpHxCOGi
— Thanthi TV (@ThanthiTV) May 1, 2023