
சென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு பரவிய தீ
செய்தி முன்னோட்டம்
சென்னை மேடவாக்கம் சதுப்பு நில பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
பெரும்பாக்கம் பகுதியில் சூழ்ந்துள்ள கரும்புகையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தீ எரிந்து கொண்டிருக்கும் இடம் தீயணைப்பு படையினரால் உடனடியாக அணுகமுடியாத இடத்தில் இருந்ததால், தீயினை அணைக்கும் பணி சற்றே தொய்வடைந்தது.
சதுப்பு நிலப்பகுதியில் காய்ந்த புற்கள் தீ பற்றி எரிந்தன.
கடும் வெயில் காரணமாக சதுப்பு நிலத்தில் தேங்கிய நீர் வற்றி அங்குள்ள புற்களில் எளிதில் தீ பற்றியுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
மேடவாக்கம் சதுப்புநிலத்தினை தேடி அடைகாக்க பல அரியவகை பறவையினங்கள் வருவதுண்டு. இந்த தீ விபத்தில் ஏராளமான பறவைகள் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பெரும்பாக்கத்தில் தீ விபத்து
#NewsUpdate | சென்னை அடுத்த பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் காய்ந்த புற்கள் தீ பற்றி எரிந்தன. கடும் வெயில் காரணமாக சதுப்பு நிலத்தில் தேங்கிய நீர் வற்றி அங்குள்ள புற்களில் எளிதில் தீ பற்றியுள்ளன. #SunNews | #Chennai | #MarshLandFire pic.twitter.com/I3SWJqRH4d
— Sun News (@sunnewstamil) May 31, 2024