விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது பூஜா கேத்கரின் பெற்றோர் மற்றும் 5 பேர் மீது புனே கிராமப்புற காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பூஜாவின் தாயார் மனோரமா கேத்கர் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டி உள்ளூர் விவசாயி ஒருவர் பாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த எப்ஐஆரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆயுதச் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா
நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு
நிலத் தகராறு பிரச்சனையில் ஒரு குழுவை மனோரமா துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதைக் காட்டும் பழைய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புனேவில் உள்ள தத்வாலி கிராமத்தில் உள்ள நிலம், ஓய்வு பெற்ற மகாராஷ்டிர அரசு அதிகாரி திலீப் என்பவரால் வாங்கப்பட்டதாகும்.
ஆனால், மனோரமா அந்த நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயற்சிப்பதாகவும், மற்ற விவசாயிகளை அச்சுறுத்தியதாகவும் உள்ளூர் விவசாயி குல்தீப் பசல்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே, மனோரமாவின் மகள் பூஜா கேத்கர் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே பூஜா, தனது காரில் சைரன் மாட்டியதாகவும், உடன் பணிபுரியம் அதிகாரிகளிடம் அதிகாரத்தை கட்டியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.