சுதந்திரம் அடைந்ததில் இருந்து 68% உயர்ந்திருக்கும் பெண்களின் கல்வியறிவு விகிதம்
இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. சுதந்திரத்தின் போது 9 சதவீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவு விகிதம், தற்போது 77 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று LiveMint தெரிவித்துள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார். தற்போது, இந்தியாவில் 84.7 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின் படி, கேரளாவில் 92.2 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். இதனால் கேரளா, இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு உள்ள மாநிலமாக இருக்கிறது.
கிராமப்புறங்களை விட சிறந்து விளங்கும் நகர்ப்புறங்களை
யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் 91.85 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர், இது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 91.33 சதவீதத்துடன் மிசோரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், குறைந்த கல்வியறிவு விகிதம் பீகாரில்(61.8%) பதிவாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம்(65.3%) மற்றும் ராஜஸ்தான்(66.1%) மாநிலங்களிலும் மிக குறைந்த சதவீதங்கள் பதிவாகியுள்ளன. பள்ளி இடைநிறுத்த விகிதம் 12.6 சதவீதமாக உள்ளது. 19.8 சதவீத மாணவர்கள் இடைநிலைப் படிப்பை இடைநிறுத்தியுள்ளனர். கல்வியறிவு விகிதத்தில் கிராமப்புறங்களை விட இந்தியாவின் நகர்ப்புறங்கள் சிறந்து விளங்குகின்றன. இந்திய கிராமப்புறங்களில் கல்வியறிவு விகிதம் 67.77 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் இது 84.11 சதவீதமாக உள்ளது.