மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இது முழுக்கமுழுக்க 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' என்னும் ஹாலிவுட் படத்தின் பாணியில் நடந்துள்ளது. அது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதில் ஈடுபட்ட அனைவரும் முகமூடி அணிந்து வந்திருந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வழக்கமாக ஏ.டி.எம்.மெஷினை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், மெஷினில் ஒரு கயிற்றினை கட்டி அதன் மறுமுனையினை காரில் கட்டி இழுக்க முயற்சித்துள்ளனர். இம்முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கருவிகள் கொடுத்த எச்சரிக்கையின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் காவல்துறையிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.