
தமிழகத்தில் இன்று முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இன்று (ஏப்ரல் 1) முதல் 40 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் 5 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்தபடி, புதிய திருத்திய கட்டணங்கள் இன்று முதல் வசூலிக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு!#SunNews | #Tollplaza | #TollgateFare pic.twitter.com/Un9MKS7Dj6
— Sun News (@sunnewstamil) April 1, 2025
விவரங்கள்
முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் மட்டுமே விலை உயர்வு
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் - புழல் நெடுஞ்சாலையில் சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகள் இப்போது உயர்த்தப்பட்ட கட்டணங்களை வசூலிக்கின்றன.
இந்த உத்தரவு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும்.
தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.