Page Loader
பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  
10 ஆம் வகுப்பு CBSE அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து டார்வின் கோட்பாடு மற்றும் தனிம அட்டவணை நீக்கப்பட்டது

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

எழுதியவர் Sindhuja SM
Jun 01, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள். இந்த தலைப்புகளை எல்லாம் NCERT பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கி உள்ளது. 11-18 வயதுடைய சுமார் 134 மில்லியன் மாணவர்களை பாதிக்கும் இந்த மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 15-16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியை நீக்கியதால் ஏற்கனவே பெரும் சர்ச்சை கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் போடப்பட்டன. ஆனால், புதிதாக வெளியிட்டிருக்கும் பாடப்புத்தகங்களில், தனிம அட்டவணை, மாசுபாடுகள் மற்றும் பருவநிலை தொடர்பான தலைப்புகள் உட்பட பல்வேறு தலைப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) நீக்கியுள்ளது.

details

NCERT இந்த மாற்றங்களுக்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை

இதனால், மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயிரியல், வேதியியல், புவியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. "பரிணாம வளர்ச்சியை பற்றி பேசாமல் உயிரியலைக் கற்பிக்க முயற்சிக்கும் எவராலும் இன்றைய காலகட்ட உயிரியலைக் கற்பிக்க முடியாது." என்று கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அறிவியல்-கல்வி ஆராய்ச்சியாளர் ஜோனதன் ஆஸ்போர்ன் ஒரு ஆய்வு கட்டுரையில் கூறி இருக்கிறார். 4,500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தொடர்பாளர்கள் பரிணாம வளர்ச்சியை மீண்டும் புத்தகங்களில் சேர்க்க கோரி, கொல்கத்தாவில் உள்ள பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி என்ற பிரச்சாரக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், NCERT இந்த மாற்றங்களுக்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை.