காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி.
தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் விஜிலென்ஸ் டிஜிபியாக பணியாற்றி வந்த ரவி, ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே விருப்ப ஓய்வு பெற்றார்.
பீகாரை பூர்வீகமாகக் கொண்ட ரவி, 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு கேடரில் தேர்வாகி 34 ஆண்டுகளாக காவல்துறையில் பணியில் இருந்தார்.
மேலும் தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபியாக பரிந்துரைக்கப்பட்ட, மூவருள் இவரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
2nrd card
நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் இருந்து போட்டி
இன்று மதியத்திற்கு மேல் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் ரவி இணைகிறார்.
மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பீகாரில் இருந்து போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி பணியாற்றி வந்த கருணா சாகர், சமீபத்தில் விருப்பு ஓய்வு பெற்று ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
கருணா சாகர் தற்போது அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். மேலும் இவர் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.