NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்
    இவர்கள் இருவரும் நேற்று பட்டப்பகலில் கொல்லப்பட்டனர்

    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 12, 2023
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் உள்ள வளர்ந்து வரும் ஒரு சிறு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) அலுவலகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரின் அமிர்தஹள்ளியில் உள்ள பம்பை எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற சிறு தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.

    இணைய சேவைகளை வழங்குவது இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஃபனிந்திர சுப்ரமணி என்பவரும், தலைமை நிர்வாக அதிகாரியாக வினுகுமார் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில், இவர்கள் இருவரும், பெலிக்ஸ் என்ற சந்தேக நபரால் நேற்று பட்டப்பகலில் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சுஜா

    3 பேர் சேர்ந்து திட்டமிட்டு செய்த கொலை 

    இதே நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பெலிக்ஸ், தனது தொழில் நடைமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், நேற்று மாலை 4 மணியளவில், திடீரென்று ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்திற்குள் ஒரு வாளுடன் நுழைந்த பெலிக்ஸ், ஃபனிந்திர சுப்ரமணி மற்றும் வினுகுமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய வடகிழக்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மி பிரசாத், குற்றம் சாட்டப்பட்டவருடன் மேலும் இரண்டு பேர் இருந்தனர் என்றும், மூவரும் தப்பியோடி இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    "குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கொலை
    குற்றவியல் நிகழ்வு
    காவல்துறை

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா

    காவல்துறை

    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர் அமெரிக்கா
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025