NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: டி.கே.சிவகுமார்

    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 26, 2023
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    ஏற்கனவே கனகபுரா, பெங்களூருவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சர்ச்சையை கிளப்பிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தற்போது ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

    நேற்று (அக்டோபர் 25 ) இரவு, டி.கே.சிவக்குமார், தனது சமூக வலைதளமான 'எக்ஸ்'-ல், "சன்னபட்னா, ராமநகரா, கனகபுரா, மாகடி மற்றும் ஹரோஹல்லி தாலுகாக்களை உள்ளடக்கிய ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தட்சிணா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டார்.

    சிவகுமாரின் இந்த கருத்திற்கு, எதிர்க்கட்சிகள், குறிப்பாக தற்போது மாநில ஜேடிஎஸ் தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .

    card 2

    சர்ச்சையை ஈர்க்கும் சிவகுமாரின் பதிவு

    ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு எல்லைக்கு சொந்தமானது என்றும், அதன் நான்கு தாலுகாக்களில் வசிப்பவர்கள் "பெங்களூரியர்கள்" என்றும் சிவகுமார் மேலும் கூறினார்.

    சிவகுமாரின் இந்த பதிவை கடுமையாக சாடிய, ராமநகரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, "ஏழு பிறவி எடுத்தாலும் ராமநகரா மாவட்டத்தைப் பிரிக்க முடியாது" என்று கூறினார்.

    தொடர்ந்து, இது "சட்டவிரோத" மற்றும் "பினாமி" சொத்துக்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று குமாரசாமி குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையில், முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து துணை முதல்வர் தன்னிடம் இன்னும் விவாதிக்கவில்லை என்றும், அவர் என்னுடன் விவாதிக்காததால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பெங்களூர்
    டி.கே.சிவகுமார்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    கர்நாடகா

    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி தமிழ்நாடு
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் தமிழ்நாடு
    ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்   ராகுல் காந்தி
    கர்நாடக சட்டசபையில் அமளி துமளி: 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்  காங்கிரஸ்

    பெங்களூர்

    ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா டாடா
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் கொலை
    இரண்டு  பேரை வெட்டி கொன்றுவிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்ட குற்றவாளி  கொலை
    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி  ஜெயலலிதா

    டி.கே.சிவகுமார்

    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025