
தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி
செய்தி முன்னோட்டம்
தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை கிணற்றில் விழுந்தது.
அதனை மீட்ட வனத்துறையினர் அதன் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தினால், குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பினை ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
உதவி கால்நடை மருத்துவர் அறிவுறுத்தல்படி யானைக்கு திரவ உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
தாய் பால் இல்லாததால் குட்டி யானைக்கு மனிதன் உண்ணும் லாக்டொஜென் வகை உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குட்டி யானைகளுக்கு செரிமாணமானால் அது மீண்டு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வகை உணவு இந்த குட்டி யானைக்கு செரிமாணம் ஆகவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நேற்று(மார்ச்.,30) இரவு சோர்வாக காணப்பட்ட நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி
#JUSTIN || பொம்மன்- பெல்லி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு
— Thanthi TV (@ThanthiTV) March 31, 2023
* நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குட்டியானை
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்தது குட்டியானை pic.twitter.com/7yR4zC2pBq