நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, திமுக போட்டியிடவுள்ள இடங்கள் மற்றும் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி ஆகியவையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.
ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக, திருச்சியில் போட்டியிடவுள்ளது.
மறுபுறம் திமுக, தென்சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இதற்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
ட்விட்டர் அஞ்சல்
திமுக போட்டியிடும் தொகுதிகள்
#தேர்தல்BREAKING | மக்களவைத் தேர்தல் 2024 - திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்..!#SunNews | #DMKAlliance | #ElectionsWithSunNews | #INDIA | @mkstalin pic.twitter.com/gWftvpcF9q
— Sun News (@sunnewstamil) March 18, 2024
ட்விட்டர் அஞ்சல்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்
#BREAKING | திருச்சி மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு.#SunNews | #DMKAlliance | #MDMK pic.twitter.com/et3At48KTf
— Sun News (@sunnewstamil) March 18, 2024
ட்விட்டர் அஞ்சல்
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
#களம்அறிவோம் | மக்களவைத் தேர்தல் 2024 - திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்..!#SunNews | #DMKAlliance | #INDIA | #ElectionsWithSunNews | @mkstalin | @SPK_TNCC | @RahulGandhi pic.twitter.com/lyFwa7LRxK
— Sun News (@sunnewstamil) March 18, 2024