2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு: EPS தலைமையிலான அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக இணைந்தது
செய்தி முன்னோட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து 'வெற்றிக் கூட்டணி'யை அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இன்று அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம்" என்று தெரிவித்தார். "அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது. இது திமுக ஆட்சியை அகற்றுவதற்கான வெற்றிக் கூட்டணியாக அமையும்" என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | அடுத்து அதிமுக ஆட்சி அமையும் - அன்புமணி#SunNews | #ADMK | #PMK | #Anbumani pic.twitter.com/yuynHN5vCE
— Sun News (@sunnewstamil) January 7, 2026
தேர்தல் உத்தி
பாமக பிளவும், அதிமுகவுடன் இணைவும்
234 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து போட்டியிட்டு, திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கம் என்று தலைவர்கள் கூறியுள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக, தற்போது 2026 தேர்தலுக்காக மீண்டும் கைகோர்த்துள்ளன. இவர்களுடன் பாமக-வும் இணைந்திருப்பது வட தமிழகத்தில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாமக இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள சூழலில், அன்புமணி தலைமையிலான அணி அதிமுக-வுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.