அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதான கைவினை தம்பதியினர் உருவாகியுள்ளனர்.
ராமரின் பக்தரும் அலிகார் கைவினைஞருமான சத்ய பிரகாஷ் ஷர்மா, உலகின் மிகப்பெரிய கையால் செய்யப்பட்ட பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த பூட்டை செய்து முடிப்பதற்கு பல மாதங்கள் ஆனது என்று கூறப்படுகிறது.
10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட இந்த பூட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நான்கு அடி நீள சாவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ஜ்க்ள்
வருடாந்திர அலிகார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பூட்டு
ஷர்மா தனது கனவு திட்டத்தை நனவாக்க ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தனித்துவமான பூட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வருடாந்திர அலிகார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
தனது குடும்பம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கையால் செய்யப்பட்ட பூட்டுகளை வடிவமைத்து வருவதாகவும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக தான் அலிகாரில் பூட்டுகளை செய்து வருவதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பூட்டான இதை அவர் இந்த ஆண்டியின் இறுதியில் அயோத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளார்.
அயோத்தி கோவிலுக்கு எதிராக பல ஆண்டுகள் நடந்து வந்த வழக்கு நவம்பர்-2019இல் இந்துக்களுக்கு சாதகமாக முடிந்தது.
அதனையடுத்து, தற்போது தோராயமாக ரூ.18,000 கோடி செலவில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.