'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து
இன்று (ஏப்ரல்.,14)தமிழ்நாடு முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தமிழ் கலாச்சாரத்தில் மண்ணை தாய் மண் என்று கூறுகிறோம். ஏனென்றால் அந்த காலத்தில் இருந்தே மண் நம் உயிருக்கு மூலமானதாகும். அந்த மண்ணில் தான் விவசாயம் செய்துவருகிறோம். அப்படி இருந்தும் கடந்த 20-30வருடங்கள் நம் மண்ணை காப்பாற்றாமல் நாம் விட்டுவிட்டோம். நமது மண்ணை காக்க நாம் அனைவரும் கம்பு, சாமை, வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானியஉணவுகளை உண்ண வேண்டும். சிறுதானியங்கள் விளையும் இடத்தில் மண் வளமாகவே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல - சத்குரு
மேலும் அவர் கூறுகையில், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல்பாடு மட்டுமல்ல. நாம வாழும் முறையில் நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில் என எல்லாயிடங்களிலும் சித்தர், சீடர்,யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம். அதனால்தான் ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம். குடும்பவாழ்க்கை, பொருளாதாரம் என்கிற அனைத்தையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம்தான். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதால் தான் தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ்கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும். என்று சத்குரு தெரிவித்துள்ளார்.