"மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது": மத்திய கல்வி அமைச்சர்
நாட்டில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீட் தேர்வு முறைகேடு மற்றும் NET தேர்வு ரத்து தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வெளிப்படைத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" எனத்தெரிவித்தார். "நீட் தேர்வு சூழலில், பீகார் அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். பாட்னாவில் இருந்து சில தகவல்கள் வருகின்றன. போலீசார் விசாரித்து, விரிவான அறிக்கை சமர்ப்பிக்கட்டும். அதன் அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். "மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைக்கப் போகிறது. NTA, அதன் கட்டமைப்பு, தேர்வு செயல்முறை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு நெறிமுறையை மேலும் மேம்படுத்த அந்த உயர்மட்டக் குழுவிடமிருந்து பரிந்துரைகள் பெறப்படும்" என்றார்.
நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் தெரிவித்தது என்ன?
நீட் தேர்வு குறித்து பிரதான் கூறுகையில்,"ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் (பீகார்), கடினமாக உழைத்து, நேர்மையாக அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது. அவர்களின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கூற விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் பாட்னா காவல்துறையின் பணி பாராட்டத்தக்கது. மத்திய அரசும், பீகார் காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்" என்றார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர்,"எங்கள் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்குமாறு எனது எதிர்க்கட்சி நண்பர்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்...எங்கள் அரசாங்கம் 100% வெளிப்படைத்தன்மைக்கும், நமது மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. மேலும் எவ்விதமான முறைகேட்டையும் எங்கள் அரசு பொறுத்துக்கொள்ளாது நான் உங்களுக்கு மீண்டும் உறுதியளிக்கிறேன்" என மீண்டும் வலியுறுத்தினார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் உறுதி
மத்திய கல்வி அமைச்சர்
NET தேர்வு ரத்து குறித்து மத்திய அரசு தெரிவித்தது என்ன?
முன்னதாக, தேசிய தகுதித் தேர்வை ரத்து செய்வது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், கல்வி அமைச்சகம் வியாழன் அன்று, தேர்வின்,"ஒருமைப்பாடு சமரசம் செய்யப்பட்டிருக்கலாம்" என்பதால் ரத்து செய்யப்பட்டது என்று கூறியது. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தகவலின் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 'ஆன்டி பேப்பர் லீக்' சட்டம் அறிமுகப்படுத்திய பிறகு, நடத்தப்படும் முதல் நடத்தும் முதல் பொதுத் தேர்வு இதுவாகும்.
அரசியல் காட்சிகள் இந்த விவகாரத்தில் ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டனர்
NEET தேர்வுத்தாள் வெளியான விவகாரத்தில் தேஜஸ்விவிற்கு யாதவ் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் தான் இந்த வினாத்தாள் கசிவு மற்றும் நீட்-யுஜி 2024 வரிசையின் முறைகேடுகளுடன் தொடர்புடையவர் என்று பீகார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா வியாழக்கிழமை கூறினார். மறுபுறம், பாஜக தலைமையிலான NDA அரசை எதிர்க்கட்சிகள் குறைக்கூறின. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கிண்டலடித்து, "ரஷ்யா-உக்ரைன் போரை மோடிஜி நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகிதக் கசிவைத் தடுக்க முடியவில்லை அல்லது தடுக்க விரும்பவில்லை" என்றார்.