NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2023
    03:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு, சில தினங்களுக்கு முன்னர் காவலில் எடுத்து விசாரித்தது, அமலாக்கத்துறை.

    அவரது விசாரணை நிறைவடைந்த நிலையில், அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார், செந்தில் பாலாஜி.

    இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

    விசாரணைக்கு வருமாறு, அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி அவர் காலம் ஆஜர் ஆகாமல் இருந்தார்.

    card 2

    கைது ஆனாரா அசோக் குமார்?

    இந்நிலையில், அசோக் குமாரின் மனைவிக்கும் சென்ற வாரம் அமலாக்க துறையினரின் நோட்டீஸ் பறந்தது. அசோக் குமாரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதனிடையே, நேற்று, அசோக் குமாரை கேரளவின் கொச்சியில் அமலாக்கத்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியானது. தற்போது அதை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது அமலாக்கத்துறை.

    அசோக் குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி, 4 முறை சம்மன் அனுப்பியும், அசோக் குமார் விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை என்றும், அசோக் குமாரின் மனைவி உள்ளிட்டோரும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    கைது
    அமலாக்க இயக்குநரகம்
    சம்மன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    செந்தில் பாலாஜி

    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025