Page Loader
சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை 
சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை

சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை 

எழுதியவர் Nivetha P
Jun 13, 2023
02:52 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததையடுத்து, இன்று(ஜூன்.,13)காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. சோதனை நடந்து முடிந்த பின்னர் தனது கருத்தினை தெரிவிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்திருந்தார். இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. அவரது அலுவலக உதவியாளர் விஜயகுமாரையும் அழைத்துச்சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையினை மேற்கொண்டுள்ளனர். மேலும், அமைச்சரின் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் விசாரிக்க அழைத்து சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post