LOADING...
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது
அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2025
08:02 am

செய்தி முன்னோட்டம்

பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. பல்கலைக்கழகம் போலி 'NAAC' அங்கீகாரம் மற்றும் UGC 12(B) அங்கீகாரம் பெற்றதாக தவறாக கூறி, மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றியதாகக் கூறி டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு பதிவு செய்த இரண்டு FIRகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த மோசடி மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணம் ஈட்டப்பட்டு, அது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் திசை திருப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்திக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

ஷெல் நிறுவனங்கள்

ஷெல் நிறுவனங்களும், பயங்கரவாத நிதி உதவி கோணமும்

இந்த சோதனைகளின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூபாய் 48 லட்சம் ரொக்கம், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட பல போலியான ஷெல் நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தவிர கைது செய்யப்பட்ட ஜவாத் அஹ்மத் சித்திக் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்குப் பயங்கரவாத செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்ற கோணத்தில் ED விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை குண்டுவெடிப்புக்குக் காரணமான வாகனத்தை ஓட்டிய டாக்டர் உமர் நபி, இந்தப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்பதும், அவரோடு தொடர்புடைய சில பல்கலைக்கழக ஊழியர்கள் ஏற்கனவே பயங்கரவாத செயல்பாட்டு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.