Page Loader
போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!
பொருட்களை எரிக்காதீர்கள் பிறருக்கு கொடுங்கள்!

போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!

எழுதியவர் Sindhuja SM
Jan 09, 2023
09:33 am

செய்தி முன்னோட்டம்

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்கள், உடைகள், டயர்கள் போன்றவற்றை தீயிலிட்டு எரித்து கொண்டாடுவார்கள். ஆனால், இந்த நாளில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க முடிவதில்லை. இதனால், ஏற்படும் புகை மூட்டம் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கின்றன. அதனால், இது போன்ற சுற்று சூழல் மாசைத் தடுக்க சென்னை மாநகராட்சி ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ஒரு வீடியோ காணொளியையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில், தேவையில்லாத பொருட்களை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளது. ஜனவரி 8-13 வரை பழைய பொருட்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

"பவி அக்கா" என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சென்னை மாநகராட்சி!