LOADING...
தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளத்தை அறிமுகம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்
இந்தியாவில் தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளம் அறிமுகம்

தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளத்தை அறிமுகம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2025
05:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் செயல்திறனைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு பெரிய டிஜிட்டல் தளமான ECI Net எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தேர்தல் ஆணைய செயலிகளின் தாய் என்று வர்ணிக்கப்படும் இந்த லட்சியத் திட்டம், ஏற்கனவே உள்ள 40க்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான ஆப்ஸ்களை ஒரே அமைப்பில் ஒருங்கிணைக்கிறது. இந்த புதிய அமைப்பு வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025இல் சோதனை அடிப்படையில் அறிமுகமாகிறது. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) முதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEOs) வரையிலான அனைவருக்கும் இந்த ECI Net ஒரே தீர்வாகச் செயல்படும்.

ஒருங்கிணைப்பு

குடிமக்கள் சேவை ஒருங்கிணைப்பு

இதன் மூலம், வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது எளிமையாகும். ECI Net தளத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, குடிமக்கள் சேவை ஒருங்கிணைப்பு ஆகும். வாக்காளர்கள் இப்போது 1950 வாக்காளர் உதவி எண்ணைப் பயன்படுத்தி, +91 [STD Code] 1950 என்ற வடிவமைப்பில் தங்கள் உள்ளூர் BLOக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். மேலும், வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விரைவான தீர்வு காண இந்தச் செயலி மூலம் BLOக்களுடன் அழைப்பை முன்பதிவு செய்யலாம்.

வெளிப்படைத்தன்மை 

வெளிப்படுத்தன்மையை மேம்படுத்த புதிய அறிவிப்பு

வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒரு முக்கிய நடைமுறை சீர்திருத்தத்தையும் அறிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, மின்னணு வாக்குகள் எண்ணுவதற்கு முந்தைய இரண்டு சுற்றுக்களுக்கு முன்பே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இந்தச் செயல்முறை மாற்றம், ECI Net தளத்தின் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்புடன் இணைந்து, ஒவ்வொரு தேர்தலும் துல்லியமாகவும், சரியான நேரத்திலும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும்.