
2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 22 அரசியல் கட்சிகளும் அடக்கம். 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், தேர்தலில் பங்கேற்காததும், தேவையான சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததுமாக இருந்த இந்த கட்சிகளின் அலுவலகங்களும், கண்காணிக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நீக்கப்பட்ட கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பட்டியல் https://t.co/xQfs1ft9fx pic.twitter.com/qnyQoODNLS
— Sun News (@sunnewstamil) August 9, 2025
மேல்முறையீடு
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்
இதனுடன், இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் மட்டுமே இயங்குகின்றன. இந்த நடவடிக்கை தேர்தல் முறையில் சீர்திருத்தத்தை நோக்கி எடுக்கப்படும் முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது. நீக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்ட கட்சிகள், இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.