Page Loader
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2024
02:40 pm

செய்தி முன்னோட்டம்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, மக்களவை தேர்தலுடன் சேர்த்தே இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை தமிழக தேர்தல் ஆணையம் மறுத்தது. இடைத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இது பற்றிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

embed

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விரைவில் அறிவிப்பு?#vikravandi | #byelection2024 | #MLApugazhenthi | #ElectionCommissionOfIndia | #villupuram | #electioncommissioners | https://t.co/z9aX2U7M4t pic.twitter.com/joLINw65nC— Kumudam Reporter (@ReporterKumudam) April 30, 2024