மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது. எனினும் அவர்கள் தாங்கள் பம்பர சின்னத்தில் போட்டியிட போவதாக கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளது. அதனால், பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட மதிமுக திட்டமிட்டுள்ளது.