Page Loader
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு
திருப்பதி கோயில் - கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு

எழுதியவர் Nivetha P
Nov 30, 2023
12:06 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியினை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ். 21 வயதாகும் இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 23ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கடந்த 27ம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றுள்ளார். அதன்படி சாமி தரிசனம் மேற்கொள்ள அவர்கள் நேற்று முன்தினம் மாலை வரிசையில் நின்றுள்ளனர் என்றும் தெரிகிறது. அப்போது அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தினால் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சாமி தரிசனத்தினை முடித்துக்கொண்டு வெளியில் வந்த லட்சுமி ராய் சந்தோஷ் தங்கம் மண்டபம் அருகே நடந்து வந்துள்ளார்.

மரணம் 

கதறி அழுத புது மணப்பெணின் பெற்றோர் 

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து லட்சுமி ராய் பெற்றோர் கூறுகையில், 'லட்சுமி ராய்க்கு சிறுவயதிலிருந்தே சுவாசக்கோளாறு உள்ளது. நெரிசலில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டதால் இவ்வாறு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது' என்று கதறி அழுதவாறு தெரிவித்துள்ளனர். தற்போது அப்பெண்ணின் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. தொடர்ந்து, மணப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.