
பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவின் KSRTC பேருந்தில் 20 வயது பெண் சக பயணிக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையின் மீது 30 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கிரேசூர் தாபா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஏசி இல்லாத ஸ்லீப்பர் பேருந்து ஒன்று விஜயபுராவில் இருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தாபா அருகே இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது.
அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கியபோது, போதையில் இருந்த ஒரு நபர், சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இரவு உணவு முடிந்து திரும்பிய அந்த சக பயணி, தனது இருக்கைக்கு அருகில் யாரோ சிறுநீர் கழிப்பதைக் கண்டு, ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பிரச்னையை கூறி இருக்கிறார்.
கர்நாடகா
ஏர் இந்தியாவில் நடந்த இதே போன்ற சம்பவம்
இதைத் தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் அந்த நபரைக் கண்டித்திருக்கின்றனர்.
சக பயணிகள் அந்த நபரை மீண்டும் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை.
பெண் பயணிக்கு மாற்று இருக்கை வழங்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்திலும் நடந்தது.
அப்போது, மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் சகபயணியான ஒரு பெண்ணின் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
குடி போதையில் பயணிக்கும் பயணிகளால் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.