துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை செனாய் நகரில் திமுக ஐடி பிரிவு சார்பில் நடைபெற்ற, சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் சந்திப்பில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசியவர்,"தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் வகுத்துத் தந்த பாதையில் கட்சியையும், கழக அரசையும் நடத்துவது தான் எனது முழு இலக்கு"
"அதனால் பாராட்டுகளைப் போல விமர்சனங்களையும் நான் வரவேற்கிறேன். அது என்னை இன்னும் பக்குவப்படுத்துகிறது. உங்களது விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன் தான் அதிகமாக இருக்கும்" என பேசினார்.
2nd card
திமுகவை கற்பனையிலும் அழிக்க முடியாது- முக ஸ்டாலின்
இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய முதல்வர், "ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கொண்ட வரலாறு திமுக உடையது."
"கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் தான் அழிந்து போய் உள்ளது. திமுகவை உங்களால் கற்பனையில் கூட அளிக்க முடியாது" என முதல்வர் பேசினார்.
மேலும் திமுக எதிர்ப்பாளர்கள் பலரும் திமுகவில் இணைந்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், "திராவிட எதிர்ப்பாளர்கள் என்று சொன்ன பல பேர் இங்கு தான் வந்து அடைக்கலமானவர்கள்" என தெரிவித்தார்
3rd card
பாசிசத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்- முதல்வர்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பாஜகவையும், அதிமுகவையும் விமர்சித்தார்.
"நாம் பாசிச சக்திகளுக்கு எதிராக நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறோம். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கூட்டத்துடன் மோதிக் கொண்டிருக்கிறோம்."
"பாஜகவின் சாதியத்தன்மை திமுகவுக்கும் மட்டும் எதிரானது அல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், மனித குலத்திற்குமே எதிரியானது".
மேலும் இந்த பாசிசவாதிகளுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து, அதிமுக தமிழ் நாட்டு உரிமைகளை அடகு வைத்து விட்டதாக முதல்வர் குற்றம் சாட்டினார்.
4th card
திமுக ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல- முதல்வர்
பாஜகவினருக்கு தற்போது இருக்கும் ஒரே வேலை, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பது தான் என்ற முதல்வர், கோயிலுக்கு செல்வது துர்கா ஸ்டாலின் உடைய விருப்பம் அதைத்தான் தடுக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர், "நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி, ஆன்மீகத்துக்கு எதிரி இல்லை"
"கோவிலும் பக்தியும் அவரவர் உரிமை, அவரவர் விருப்பம்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் மு க ஸ்டாலின் முழு உரை
#Live: #Wing2Point0 - சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் சந்திப்பில் சிறப்புரைhttps://t.co/7exeppwSCk
— M.K.Stalin (@mkstalin) October 21, 2023