
இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால், இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அந்த கப்பலின் பெயர் எம்வி செம் புளூட்டோவாகும்.
இந்திய பெருங்கடல் வழியாக சென்று கொண்டிருந்த போது அந்த கப்பல் மீது உரிமை கோரப்படாத தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரித்தானிய இராணுவத்தின் நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
லைபீரியாவின் கொடியை ஏந்திய அந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் இஸ்ரேலை சேர்ந்ததாகும்.
டிஃவ்ஜ்
போர்பந்தர் கடற்கரை அருகே தீ விபத்து
20 இந்தியர் அடங்கிய பணியாளர்கள் அந்த கப்பலில் இருந்தனர் என்றும், இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையின் கப்பல், தாக்கப்பட்ட கப்பலுக்கு உதவ சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்பந்தர் கடற்கரையில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது,
இந்திய பெருங்கக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை கப்பல், ஐசிஜிஎஸ் விக்ரம், ஆபத்தில் இருந்த வணிகக் கப்பலுக்கு உதவ சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவுமாறு அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
இந்த விபத்தால் கப்பலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.