Loading...
22,000 அடி உயரம்! லடாக்கில் -15°C கடுங்குளிரில் DRDO சாதனை; ராணுவ பாராசூட் சோதனை வெற்றி
லடாக்கில் டிஆர்டிஓவின் பாராசூட் சோதனை வெற்றி

22,000 அடி உயரம்! லடாக்கில் -15°C கடுங்குளிரில் DRDO சாதனை; ராணுவ பாராசூட் சோதனை வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
08:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ போர் பாராசூட் அமைப்பை (MCPS) லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள ந்யோமா பகுதியில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த டிராப்ஜோன் பகுதிகளில் ஒன்றான இங்கு, கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில் -15 டிகிரி செல்சியஸ் கடுங்குளிருக்கு மத்தியில் இந்த சாதனை சோதனை நடத்தப்பட்டது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சாதனை 

விண்வெளியில் பாய்ந்து சாதனை படைத்த வீரர்கள்

டிஆர்டிஓவின் ஏரியல் டெலிவரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ADRDE) வடிவமைத்த இந்த பாராசூட் அமைப்பைப் பயன்படுத்தி, முதன்மை சோதனை குதிப்பாளர் விங் கமாண்டர் ராகுல் ஜா, எம்டபிள்யூஓ ஆர்.ஜே.சிங் மற்றும் எம்டபிள்யூஓ விவேக் திவாரி ஆகிய வீரர்கள் விமானத்திலிருந்து குதித்தனர்.

வீரர்கள் 20,000 அடி உயரத்தில் பாராசூட்டைத் திறந்து, கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இலக்கில் பத்திரமாகத் தரையிறங்கினர்.

தொழில்நுட்பம்

உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆக்ஸிஜன் அமைப்பு

இந்தச் சோதனையின் போது வீரர்கள் முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பாரா கம்ப்யூட்டர், ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு மற்றும் பிரத்யேக ஜம்ப்சூட்களைப் பயன்படுத்தினர்.

மிகக் குறைந்த காற்ரழுத்தம் மற்றும் உறைய வைக்கும் கடுங்குளிரிலும் இந்த அமைப்புகள் அனைத்தும் துல்லியமாகச் செயல்பட்டன.

தீவிரமான உயரமான எல்லைப்புறப் பகுதிகளில் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை மற்றும் போர் பயன்பாட்டை இந்த சோதனை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பு

தற்சார்புப் பாதுகாப்பில் இந்தியாவின் அடுத்த மைல்கல்

கடுமையான உயர் ஆல்டிடியூட் சூழ்நிலைகளில் இந்திய சிறப்புப் படைகளின் தந்திரோபாயத் திறனை அதிகரிக்க இந்த சாதனை பெரிதும் உதவும்.

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் இந்தியா அடைந்து வரும் மாபெரும் முன்னேற்றத்திற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த சான்றாகும்.

ADVERTISEMENT