தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் தடம் புரண்டது டபுள் டக்கர் ரயில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று(மே.,15)காலை 7.25மணிக்கு டபுள் டக்கர் ரயிலானது புறப்பட்டு சென்றது. ஆந்திரா மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தினை கடந்து, காலை 11.21மணிக்கு பங்காருபேட்டை அருகேயுள்ள சி.சி.நத்தம் என்னும் இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென ரயிலின் கடைசி பெட்டியான சி 1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. ரயிலின் 2 சக்கரங்கள் கீழே இறங்கியதால் பெரும் சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரயிலினை உடனடியாக நிறுத்தியுள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துச்சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தடம்புரண்டதன் காரணமாக ரயிலில் இருந்த பயணிகள் பெருமளவில் பயமுற்று காணப்பட்டதோடு, மீட்புப்பணிகளால் தாமதம் ஏற்பட்டதையடுத்து அவதிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.