NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்
    கோவை விழா முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்

    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டத்தினை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 'கோவை விழா' நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி துவங்கும் இந்த விழா ஜனவரி 8ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த விழாவின் 10ம் பதிப்பின் பொழுது, டபுள் டக்கர் பேருந்து சேவையானது முதன்முதலாக இயக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து, ஆண்டுதோறும் இவ்விழாவின் முக்கிய பங்காக இந்த சிறப்பு பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவின் முக்கிய பகுதியாக கோவை முழுவதும் சுற்றிப்பார்க்கும் வகையில், நேற்று(டிச.,24) கோவை வ.உ.சி. நகர் அருகேயுள்ள பூங்கா ஒன்றில் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவையின் துவக்க விழா நடைப்பெற்றது.

    விழா 

    இணையத்தளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தகவல் 

    இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், அம்மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்பட பலர் கலந்து கொண்டு இந்த பேருந்து சேவையினை துவக்கி வைத்துள்ளனர்.

    இந்த சிறப்பு பேருந்தில் பயணிக்க ஆர்வமுள்ள மக்கள், bit.ly/doubletakkar என்னும் இணையத்தளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு 2 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், 6 வழித்தடங்களில் இயங்கும் என்றும்,

    ஒரு பேருந்தில் 36 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை இப்பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,

    ஒவ்வொரு பயணமும் போக்குவரத்து நெரிசலை பொருட்டு 30-45 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் கோவை விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    டபுள் டக்கர் பேருந்து சேவை 

    #NEWSUPDATE | கோவை விழா - மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை#CoimbatoreVizha2024 | #Kovai | #DoubleDeckerBus pic.twitter.com/KXeQPA1bq8

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    சிறப்பு பேருந்துகள்
    ஆட்சியர்
    காவல்துறை

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    கோவை

    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கனிமொழி
    கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாக கனிமொழி உறுதி  கனிமொழி
    கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல்  தமிழ்நாடு
    கோவை பெண் ஒட்டுநர் ஷர்மிளாவிற்கு காரினை பரிசாக அளித்த நடிகர் கமல்  கமல்ஹாசன்

    சிறப்பு பேருந்துகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பண்டிகை

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது  தமிழ்நாடு

    காவல்துறை

    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025