
ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலாவாசிகளுக்காக மீண்டும் திறப்பு
செய்தி முன்னோட்டம்
ஊட்டியில் பிரபலமான சுற்றுலாத்தலம் தொட்டபெட்டா காட்சி முனை.
அங்கே வனத்துறை சார்பாக ஃபாஸ்ட் டாக் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு இருந்தது.
கடந்த வாரம் நீண்ட விடுமுறையாகையால், ஊட்டிக்கு விசிட் அடித்த பலரும் தொட்டபெட்டா மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாகி விட்டது.
இந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி அமைக்கும் பணி நிறைவுற்றதாகவும், பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தொடர் மழை காரணமாக ஊட்டி மலை தொடரில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது, மலைப்பாதை முழுவதும் ராட்சச மரங்கள், பாறைகள் உருண்டு விழுந்து சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைத்தது.
அவற்றை அகற்றும் பணி காரணமாகவும் சில காலம் தொட்டபெட்டா வ்யூ பாயிண்ட் மூடப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!#SunNews | #Doddabetta | #Ooty pic.twitter.com/URNqvNlRuQ
— Sun News (@sunnewstamil) August 26, 2024