நடிகர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக: தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்ப திமுக முடிவு செய்துள்ளது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் கமல்ஹாசன், 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் (MNM) என்ற அரசியல் கட்சியை உருவாக்கி அரசியலில் இறங்கினார்.
ஆரம்பத்தில் அவர் திமுகவை சாடி கட்சி ஆரம்பித்தாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் திமுக கூட்டணியில் இணைந்தார்.
கூட்டணி ஒப்பந்தத்தின்படி, MNM தலைவர் மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் திமுக 2025இல் அதன் ஒதுக்கீட்டில் இருந்து மாநிலங்களவை இடத்தை பரிந்துரைக்கும்.
சந்திப்பு
அறிவிப்பிற்கு முன்னர் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்த மூத்த அமைச்சர்கள்
திமுக தலைமை எடுத்த இந்த முடிவை நடிகரிடம் நேரில் தெரிவித்த திமுக மூத்த தலைவரும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, நடிகரை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
MNM கட்சியில் சமூக ஊடகப் பதிவில், இந்த சந்திப்பின் படங்களைப் பகிரப்பட்டது.
எனினும் அதில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே குறிப்பிட்டது.
இன்னும் சில மாதங்களில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களான- என். சந்திரசேகரன்(அதிமுக), அன்புமணி ராமதாஸ்(பாமக), எம். சண்முகம், வைகோ, பி. வில்சன், மற்றும் எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 12, 2025
தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள்… pic.twitter.com/ni4Ne3hqFb