திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நாடாளுமன்றத்தில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளின்போது மலைமீது ஏற்றப்படும் பாரம்பரிய தீபம் தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, உடனடி தீர்வு காண வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் பாஜகவினர் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக-வின் M.P கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் கோரிக்கையைப் பற்றி விவாதிக்க அவையில் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் மீது கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது - திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பேட்டி#Thiruparankundram | #KarthigaiDeepam2025 | #Kanimozhi pic.twitter.com/Fww2gRGRBq
— PttvOnlinenews (@PttvNewsX) December 5, 2025