ராஜ்யசபா சீட் கேட்கும் தேமுதிக; மறுக்கும் அதிமுக: இழுபறியில் கூட்டணி பேச்சுவார்த்தை
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிக சந்திக்கவுள்ள முதல் தேர்தல் இது. கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இருக்கிறார். இந்நிலையில், தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா இடத்தை ஒதுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற முடிவில் இருப்பதால், அவர் இன்னும் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறார். இதனால் அதிமுக மற்றும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஏற்படுவதிலும் இழுபறி நிலை நீடிக்கிறது. தேமுதிகவிற்கு ராஜ்யசபா இடம் ஒதுக்க அதிமுக தலைமை சம்மதிக்கவில்லை எனவும், அதற்கு மாறாக கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒன்றை பெற்றே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.