தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழின் புகழ்பெற்ற சினிமா நடிகரும், தேமுதிக கட்சியை நிறுவியவருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 71.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல், ஆம்புலன்ஸ் மூலம் மியாட் மருத்துவமனையில் இருந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மருத்துவமனை முன்பும், அவரின் வீட்டின் முன்பும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட தொடங்கியுள்ளனர்.
நிமோனியா தொற்று பாதிப்பு காரணமாக, விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
விஜயகாந்த் உயிரிழந்தது குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை
#Vijaykanth passed away: MIOT @xpresstn pic.twitter.com/3Fzcm1hHv7
— Sinduja (@Sinduj11) December 28, 2023