
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கி, விருதுகளை வழங்கினார்.
விஜயகாந்த் சார்பாக இந்த விழாவில், பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மச்சினர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஜயகாந்த் தவிர,நேற்று மொத்தம் 5 பத்ம விபூஷன் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 110 பத்ம விருதுகள் என மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.
embed
பத்ம பூஷன் விருது
Watch | மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான 'கேப்டன்' விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது! டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.#SunNews | #PadmaBhushan | #Vijayakanth pic.twitter.com/fq9VAqWeAV— Sun News (@sunnewstamil) May 9, 2024