
மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டம்?
செய்தி முன்னோட்டம்
எதிர்வரும் சட்டசபை தேர்தலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தி ஹிந்துவில் வெளியான செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கட்சியினர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனியாக களம் காண நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம், அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜயபிரபாகரனை களமிறக்கினால், அனுதாப ஒட்டு நிச்சயம் கிடைக்கும் என பிரேமலதா நம்புகிறார்
ட்விட்டர் அஞ்சல்
தேமுதிக திட்டம் பற்றி பிரேமலதா விளக்கம்
"14+1 இடங்கள் யார் ஒதுக்குகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி"
— Thanthi TV (@ThanthiTV) February 7, 2024
"இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை"
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் #PremalathaVijayakanth #DMDK #PressMeet #ThanthiTV pic.twitter.com/bqJeNSNA1t