
தீபாவளி பண்டிகை - வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நவ.,5) தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இதனையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏதுவாக தமிழக அரசு உணவுத்துறை சார்பில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் மக்களுக்கு தேவையான பொருட்களை இல்லை என்று கூறாமல் வழங்க, கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பினை சரி பார்த்து கொள்ளுமாறும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ரேஷன் அட்டை தாரர்களுக்கு பண்டிகை காலம் முடியும் வரை வாரம் முழுவதும் அனைத்து நாட்களும் அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அரசின் முக்கிய அறிவிப்பு
#JUSTIN நவ.5ல் ரேஷன் கடைகள் செயல்படும் #RationShop #TamilNadu #TNGovt #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/iZxgXvD8Is — News18 Tamil Nadu (@News18TamilNadu) November 1, 2023