Page Loader
இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி 
இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையேற்று நடத்தினார்

இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2024
06:25 pm

செய்தி முன்னோட்டம்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் பேரணி இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அந்த பேரணியை இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையேற்று நடத்தினார். அந்த பேரணியில், மன்சூர் அலி கான், அட்டகத்தி தினேஷ் உட்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில், இது வரை 11 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் பல்வேறு கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று பேரணி நடைபெற்றது.

ட்விட்டர் அஞ்சல்

ஆர்ம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி