இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு:இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(மே.,3)காலமானார்.
இவருடைய மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவரது இறுதி ஊர்வலம் நாளை(மே.,4)நடைபெறவுள்ளது.
சதுரங்க வேட்டை போன்ற படங்களை தயாரித்த மனோபாலா அவர்கள் சிறை பறவை, ஊர்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் போன்ற தமிழ் திரைப்படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார்.
சுமார் 700க்கும்மேற்பட்ட படங்களில் இவர் நடித்தும் உள்ளார்.
இவருடைய இந்த திடீர் மறைவு சினிமா வட்டாரங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர் கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுச்செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் செய்தியாக பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || மனோபாலா ட்விட்டரில் கடைசியாக பகிர்ந்த புகைப்படம்..! | #Manobala | #Twitter | #RIPManobala | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/D185KfGIkh
— Polimer News (@polimernews) May 3, 2023