அயோத்தியாவிற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை துவக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னையிலிருந்து அயோத்தியாவிற்கு நேரடி விமான சேவை இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ளது.
அதேபோல மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் அயோத்தியாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
இந்த சேவையினை ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைக்க உள்ளார்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியாவில் ராமர் கோவிலை திறந்ததும், அந்த நகரை முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக ராமர் கோவில் திறப்புவிழாவிற்காக அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சமயமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்வையிட வெளிநாட்டவர்களை ஈர்க்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையிலிருந்து விமான சேவை
சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை! #SunNews | #Chennai | #Ayodhya pic.twitter.com/jLxR21YNN1
— Sun News (@sunnewstamil) January 30, 2024
ட்விட்டர் அஞ்சல்
விமான சேவை நேரங்கள்
மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா சேவையை தொடங்கி வைக்க உள்ளார். #SunNews | #Chennai | #Ayodhya pic.twitter.com/OQPMBWgsrw
— Sun News (@sunnewstamil) January 30, 2024