
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி உறுதியா? முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கிளம்பும் எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், ஏமாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது என கழக வாரிசுகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற செய்தி பல நாட்களாக உலவி வருகிறது.
இது குறித்து ஸ்டாலினோ, உதயநிதியோ தெளிவான பதிலளிக்காத நிலையில், முதலைச்சரின் இந்த பதில் வந்துள்ளது.
முன்னதாக இது பற்றிய கேள்விக்கு உதயநிதி, "இது குறித்து முடிவெடுப்பது முற்றிலும் முதல்வரின் (முதல்வர்) உரிமை" என்றார்.
மேலும், 'எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் அவர்தான் (முதலமைச்சர்) தான் எடுப்பார்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Embed
"ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்" - முதல்வர் ஸ்டாலின்#Minnambalam #MKStalin #DMK #TNCabinet #UdhayanidhiStalin #DeputyCM pic.twitter.com/K2IjaDUWNN
— Minnambalam (@Minnambalamnews) September 24, 2024
சூசகம்
அமைச்சர்களும் சூசகமாக உணர்த்தினர்
முன்னதாக, அமெரிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் பதவிக்கு உயர்த்துவது குறித்து மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்தார்.
'மாற்றம் ஒன்றே நிலையானது என்றும் மக்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்' என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "கல்வியும் மருத்துவமும் இரு கண்கள் போன்றது என்று கூறிய முதல்வர், கல்வியை மிகவும் போற்றுகிறார். திறன் மேம்பாடு என்ற துறை இருப்பது பலன். , இது நமது துணை முதலமைச்சரின் கீழ் வரும் - மன்னிக்கவும், எங்கள் அமைச்சர் உதயநிதி, ஆகஸ்ட் 19 க்கு முன் அவரை அப்படி அழைக்க முடியாது." எனக்கூறியதும் குறிப்பிடத்தக்கது.