
பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு வழக்கில் பண மதிப்பிழப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
நாட்டில் கருப்பு பணத்தை மொத்தமாக ஒழிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கிவிக்கவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை தடுக்கவும் இந்த பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் கூறின.
இதற்கு எதிராக 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
02 Jan 2023
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு!
இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்குகளின் வாதங்களை எல்லாம் விசாரித்த நீதிபதிகள் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கினர்.
இந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
"பணமதிப்பிழப்பு என்பது பொருளாதார கொள்கை முடிவாகும்.
அதனால், அந்த நடவடிக்கைகளை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவிட முடியாது.
ரிசர்வ் வங்கியுடன் சுமார் 6 மாதங்கள் கலந்து பேசி தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
எனவே, இந்த நடவடிக்கையில் மத்திய அரசிடம் எந்த ஒரு குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.
அதனால், இந்த 57 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
பண மதிப்பிழப்பு செல்லும்.", என்று உத்தரவிட்டுள்ளது.