
5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசி எரிந்த ஆசிரியை!
செய்தி முன்னோட்டம்
5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியை ஒருவர் மாடியில் இருந்து வீசி எரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நிகாம் நகரில் இருக்கும் பிராத்மிக் வித்யாலயா என்னும் பள்ளியில் வேலை செய்பவர் ஆசிரியை கீதா ,.
நேற்று காலை 11 மணியளவில், 5ஆம் வகுப்பிற்கு இவர் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது அந்த வகுப்பில் படிக்கும் வந்தனா என்னும் மாணவியின் மீது கோபம் கொண்டுள்ளார்.
இந்த ஆத்திரத்தில், அவர் சிறுமி வந்தனாவை அடித்து காயப்படுத்தியது மட்டுமில்லாமல் கத்திரிகோலால் சிறுமியைக் கொடூரமாக தாக்கியும் சிறுமியின் முடியை வெட்டியும் துன்புறுத்தியுள்ளார்.
அதன் பின்பும் கோபம் குறையாத அந்த ஆசிரியை, சிறுமி வந்தனாவை மாடி ஜன்னலில் இருந்து கீழே வீசி எரிந்துள்ளார்.
ஆசிரியை
ஆசிரியை கீதா போலீஸில் ஒப்படைப்பு!
இதனால் காயமடைந்த சிறுமி தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படி ஒரு கொடூரமான செயலை ஒரு சிறுமிக்கு செய்த ஆசிரியை கீதா தேஷ்வாலை அப்பகுதியினர் இணைந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதான இவர் மீது 307 ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை காவல்துறை டிஜிபி ஸ்வேதா சவுஹான் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுமியின் மொத்த மருத்துவ செலவையும் டெல்லி கார்ப்பரேஷன் ஏற்றுள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து டெல்லி காவல்துறைக்கு ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது.