Page Loader
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார்.

டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்

எழுதியவர் Sindhuja SM
Nov 06, 2023
10:27 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு நெருக்கடி குறித்து விவாதிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மதியம் 12:00 மணிக்கு இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் டெல்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஜஃவாஸ்

டெல்லி காற்றின் தரக் குறியீடு 488 AQIவாக அதிகரிப்பு 

5வது நாளாக தொடர்ந்து டெல்லி காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி காற்றின் தரம் 483 AQIவாக இருந்த நிலையில், இன்று அது 488 AQIவாக அதிகரித்துள்ளது. AQI என்பது காற்றின் தரக் குறியீடாகும். RK புரம் (466), ITO (402), பட்பர்கஞ்ச் (471), மற்றும் நியூ மோதி பாக் (488) ஆகியவை தேசிய தலைநகரில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.