
நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி
செய்தி முன்னோட்டம்
அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் கல்வி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) தலைவருமான அதிஷி இன்று இது குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.
தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லியில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.
இதற்கு முன்னதாக, டெல்லி அரசு அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 2 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டது.
கிளன்ஸ
டெல்லி காற்று மாசுவினால் மக்கள் அவதி
இந்நிலையில், இது நவம்பர் 10 ஆம் தேதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காற்றின் தரம் கடந்த வெள்ளிக்கிழமை 'மிகவும் மோசமடைந்தது'. அதன்பின் எந்த முன்னேற்றமும் இல்லை.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளும் காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியின் காற்றின் தரம் 483 AQI இருந்ததை அடுத்து, இந்திய தலைநகரமான டெல்லி, நிகழ்நேர அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இதனால், டெல்லியில் வசிப்பவர்களில் பலருக்கு கண்களில் எரிச்சல் மற்றும் தொண்டை அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.