Loading...
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மோதல்: நீட் போராட்டக்காரர்கள் மீதான தடியடி, இணைய சேவை முடக்கம்
மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே புதன்கிழமை இரவு கடுமையான மோதல் வெடித்தது

டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மோதல்: நீட் போராட்டக்காரர்கள் மீதான தடியடி, இணைய சேவை முடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2026
07:40 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் மத்தியப் பகுதியான கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தர் மந்தர் அருகே நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே புதன்கிழமை இரவு கடுமையான மோதல் வெடித்தது. டால்ஸ்டாய் மார்க் பகுதியில் நள்ளிரவில் பரவிய வன்முறையை தொடர்ந்து, மத்திய டெல்லி பகுதி பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உதவி ஆணையர் (ACP) விவேக் பகத் உட்படப் பல காவல் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நடவடிக்கை

கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு

வன்முறை தீவிரமடைந்ததை தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இதனால் அப்பகுதியில் கடும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டது.

பின்னர், கூடுதல் கவாத்துப்படையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுச் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவைகள் அதிரடியாக முடக்கப்பட்டன.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்ட அமைப்பாளர்கள், இது இளைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல் என்றும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் போராட்டங்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர் கைதுகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், மாணவர்களின் போராட்டம் தணியாமல் தீவிரமடைந்து வருகிறது.

ADVERTISEMENT