Page Loader
அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு

அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 04, 2023
03:29 pm

செய்தி முன்னோட்டம்

அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கியிருக்கிறது டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி அரசு. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக இந்த சேவை துவக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரையும் தனியார் வாகனங்களை விடுத்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறது டெல்லி அரசு. மேலும், முடிந்த அளவிற்கு எரிபொருள் வாகன பயன்பாட்டைக் குறைத்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே அரசு ஊழியர்ளுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது அம்மாநில அரசு.

டெல்லி

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவை: 

மத்திய செயலகத்திற்குச் செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்காக கிட்வாய் நகர் முதல் ஆர்.கே.நகர் வரையிலும், டெல்லி அரசு ஊழியர்களுக்காக குலாபி பாக் முதல் தலைமைச் செயலகம் வரையிலும் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி அரசு. இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் பட்சத்தில், இத்திட்டத்தை மென்மேலும் மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டெல்லியின் போக்குவரத்து செயலாளர் ஆசிஷ் குந்த்ரா. 45 நபர்கள் வரை அமர்ந்து பயணிக்கு வகையில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளில் ஆண்களுக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்கள் பிங்க் டிக்கெட் மூலம் இலவசமாகவே பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.