
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
நீட் தேர்வில் முறைகேடு செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களை டெல்லி போலீஸார் இன்று(ஜூலை 4) கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற விரும்புபவர்களிடம் 7 லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதுவதற்கு இன்னொரு நபரை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்திருக்கிறது இந்த கும்பல் என்று போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) இரண்டாமாண்டு படிக்கும் நரேஷ் பிஷ்ரோய் என்பவர்தான் இந்த கும்பலுக்கு தலைவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எய்ம்ஸில் படிக்கும் பல மாணவர்களிடம் பணம் தருவதாகக் கூறி பிஷ்ரோய் பலரை இந்த கும்பலில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
வஸ்ட்க்ன்
மடிக்கணினி மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
அப்படி பணத்திற்காக இந்த கும்பலில் சேரும் எய்ம்ஸ் மாணவர்கள் தான் உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக நீட் தேர்வு எழுதி இருக்கின்றனர்.
பிஷ்ரோய், சஞ்சு யாதவ், மஹாவீர், ஜிதேந்திரா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
பிஷ்ரோய் தனது இரண்டாம் ஆண்டு கல்லூரி தேர்வு எழுதி கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு கதிரியக்கவியல் படித்து கொண்டிருக்கும் மாணவர் சஞ்சு, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதில் சிக்கினார்.
இதேபோல், டெல்லி எய்ம்ஸ் மாணவர்களான மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளிடம் இருந்து மடிக்கணினி மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.